ஐரோப்பைவை உலுக்கும் வெப்பம் – பாரிஸுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஐரோப்பைவை உலுக்கும் வெப்பம் –  பாரிஸுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஐரோப்பா முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கே வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில், ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ள பாரிஸ் உட்பட 16 துறைகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெப்பநிலை அதிகரித்து வருவதால் இத்தாலியில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேற்கு துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக
50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

போர்த்துகல் மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகள் ஜூன் மாதத்தை விடவும் இந்த வாரம் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்கிழக்கு இங்கிலாந்தில், இன்று வெப்பநிலை 35C ஆக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This