
ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு
நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று சனிக்கிழமை மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் காலங்களில், அரச இலட்சினையில் இங்கு உற்பத்தியாகும் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுமன கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை ஊடாக கூடுதல் நிவாரண விலையில் ‘ரஜ லுணு’ என்ற வர்த்தக நாமத்தில் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
