வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதிருக்க மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதிருக்க மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (24) பிற்பகல் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க குறித்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு எதிராக, மின்சார தொழிற்சங்கங்கள் பல நாட்களாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share This