மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தார் பிரதி சபாநாயகர்

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தார் பிரதி சபாநாயகர்

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாக, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு  இன்று இடம்பெறும் நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் இதன்போது அறிவித்தார்.

பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், நாடாளுமன்றின் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் அனுமதியைப் பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்  உயர் நீதிமன்ற தீர்ப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவாறு சில பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால்  இந்த மீறல்கள் பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மே மாதம்  16 ஆம் திகதியன்று அரசு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை மின்சாரம் திருத்த சட்டமூலம் தற்போது மதிப்பாய்வில் உள்ளதுடன் சட்ட சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளது.

கட்டண நிர்ணயம் மற்றும் தேசிய மின்சார ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் உட்பட, தற்போதுள்ள 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் கொண்ட இலங்கை மின்சாரச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்த சட்டமூலம் முன்மொழிகிறது.

Share This