தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடுகிறது

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடுகிறது

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் திங்கட்கிழமை (21.04.2025) கூடவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்
குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளது.

ஜனாதிபதி கடந்த நாளொன்றில் மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தப் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளது.

 

Share This