மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவுத் திருப்பலி – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவுத் திருப்பலி – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் உலகம் முழுவதும் உயிர்த்த ஞாயிறு பெருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு, நேற்று (04) சனிக்கிழமை இரவு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் விசேட நள்ளிரவுத் திருப்பலிகள் இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்திலும் பல்வேறு ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெற்றதுடன், தேவாலயங்களைச் சூழப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி நேற்று இரவு 11.15 க்கு ஆரம்பமானது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இத்திருவிழாத் திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் பக்திப்பரவசத்துடன் கலந்துகொண்ட இத்திருப்பலியின் போது, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு ஆலயத்தைச் சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )