அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் சன்ஷைன் கடற்கரையிலிருந்து கோல்ட் கடற்கரை வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கம் காரணமாக குயின்ஸ்லாந்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சில பகுதிகளில், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.