ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு
ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலஅதிர்வு இனை்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலஅதிர்வு 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
170 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.81 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.81 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்பதுடன் பொருள் சேதம் குறித்தும் இதுவரை உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.