யாழில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு – சிறுவன் உள்ளிட்ட 23 பேர் ஒரே நாளில் கைது

யாழில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு – சிறுவன் உள்ளிட்ட 23 பேர் ஒரே நாளில் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் (09.11) விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது, 17 வயது சிறுவன் ஒருவன் 09 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அதனை விற்பனை செய்வதற்காகவே உடைமையில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ். புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 550 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ,
அவர்களின் உடைமையில் இருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் , நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து 03 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 23 பேரும் யாழ். புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார் , சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share This