காசாவின் ரஃபாவில் உதவி வளாகத்தில் இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு – 27 பேர் பலி

காசாவின் ரஃபாவில் உதவி வளாகத்தில் இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு – 27 பேர் பலி

தெற்கு காசாவின் ரஃபாவில் உதவி வளாகத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 90 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழப்புகள் குறித்த அறிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது நாளாகவும், உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இதேபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை இஸ்ரேல் மறுத்துள்ளது. இதன்போது 31 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச செய்தி நிறுவனங்களை காசாவிற்குள் இஸ்ரேல் அனுமதிப்பதில்லை என்பதால் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ள முடியவில்லையென பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This