அரசாங்க வைத்திய அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை(17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்ப்பதற்கு தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காமையால் தமது சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்ததாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share This