டெங்கு ஒழிப்பு வாரம் – 396 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

டெங்கு ஒழிப்பு வாரத்தின் ஐந்தாவது நாளான நேற்று 111,000 க்கும் மேற்பட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
நுளம்பு பரவும் அபாயம் உள்ள 396 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் கீழ் 298 பாடசாலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 29,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
மேலும் டெங்கு காய்ச்சலால் 16 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.