புனித தந்த தாது வழிபாட்டை முன்னிட்டு பிரத்தியேக இணையத்தளம் அறிமுகம்

புனித தந்த தாது வழிபாட்டை முன்னிட்டு பிரத்தியேக இணையத்தளம் அறிமுகம்

ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை வழிபடவரும் பக்தர்களின் வசதி கருதி, சேவைகளை வழங்குவதற்காக daladadekma.police.lk என்ற பிரத்தியேக இணையத்தளத்தை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புனித தந்த தாதுவை வழிபடுவதற்கு வருகைத் தரும் பக்தர்களுக்கு சீரான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தகவல்களையும் ஆதரவையும் வழங்குவதை இந்த முயற்சியானது நோக்கமாகக் கொண்டுள்ளது.

போக்குவரத்து நிலைமைகள் தொடர்பிலான தகவல்கள் , புனித யாத்திரை பாதைகளின் விரிவான வரைபடங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள், வாகனத் தரிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

புனித தந்த தாதுவை வழிபடவரும் பக்தர்களின் பயணத்தை மிகவும் பாதுகாப்பானதாகவும் அசௌகரியங்கள் இல்லாததாக மாற்றுவதற்கும், யாத்ரீகர்களுக்கான முக்கியமான பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் மற்றும் அவசர தொடர்புத் தகவல்களையும் இந்த இணையத்தளம் ஊடாக அணுக முடியும்.

daladadekma.police.lk என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தபட்டதனூடாக பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share This