
தேசிய பேரிடர் நிலையை அறிவியுங்கள் – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை
தேசிய பேரிடர் நிலைமையை உடனடியாக அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தேசிய பேரிடர் நிலைமை அறிவிக்கப்பட்டால், பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதால் நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
“தேசிய பேரிடர் சூழ்நிலையை அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்கும் சட்டங்கள் குறித்து அரசாங்கத்திற்குத் தெரியாது போல் தெரிகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES இலங்கை
