வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் – ஜனாதிபதி

இந்த வருடம் வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதுவரை நெற்பயிர்களுக்கு மாத்திரம் உர மானியம் வழங்கப்பட்டது. வயலில் விளையும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானித்துள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒரு இளம் தொழில்முனைவோர் தனது தொழிலைக் காட்டி தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து புதிய தொழிலைத் தொடங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.