
ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான நெறிமுறை அதிகாரி உள்ளிட்ட இருவரிடம் வாக்குமூலம் பெற தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான நெறிமுறை அதிகாரி உள்ளிட்ட இருவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வௌிநாட்டு விஜயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகள் தற்போது வௌிநாட்டில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
