
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளகிராமமொன்றில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அங்குள்ள மருத்துவமனைக்கு நோயாளர்களும் உயிரிழந்தவர்களின் சடலங்களும் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரானில் (Tehran) எண்ணெய் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட கடும் வான்வழி குண்டுவீச்சுக்கு பிறகு அங்கு பெரும் தீப்பரவல் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
மேலும், சவுதி அரேபியா நாட்டில் குடியிருப்புப் பகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த வாரம் மத்திய கிழக்கு முழுவதும் நடந்த ஈரானின் ஆரம்ப தாக்குதல்களில் காயமடைந்த அமெரிக்க படை வீரர்களில் ஒருவரும் உயிரிழந்ததால், இதுவரை ஏழு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
