கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் – இவ்வாறான சம்பவங்களை தடுக்க பொறிமுறை

கொட்டாஞ்சேனை சிறுமியின் உயிரிழப்பு போன்று மற்றுமொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
குறித்த சிறுமியின் விடயத்தில் முதலாவது சம்பவம் இடம்பெற்ற உடனேயே அது தொடர்பில் உரிய முறையில் தகவல் பதிவாகவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
இதேவேளை, எதற்காக இந்த விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை என்பது தொடர்பிலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தொடர்பில் எதற்காக உரிய முறையில் தகவல் வழங்கவில்லை என்பது தொடர்பிலும், கொட்டாஞ்சேனை சிறுமி பயின்ற பம்பலப்பிட்டியில் உள்ள மகளிர் பாடசாலையின் அதிபரிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை,பொலிஸ“ ஆகிய தரப்புகள் அடங்கும் வகையிலான செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இவ்வாறான சம்பவம் பதிவாகுமாயின் குறித்த நான்கு நிறுவனங்களும் அறிந்திருக்க வேண்டும் என்ற வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.