முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் – சந்தேநபர்களுக்கு விளக்கமறியல்

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் – சந்தேநபர்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Share This