அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் தயாசிறி இடையே நாடாளுமன்றில் வாய்த்தர்க்கம்

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் தயாசிறி இடையே நாடாளுமன்றில் வாய்த்தர்க்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மற்றும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே இன்றைய நாடாளுமன்ற அமர்வில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

தயாசிறி ஜெயசேகர சபாநாயகருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக அமைச்சர் ஹந்துன்நெத்தி குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

சபாநாயகருக்கு நான் அறிவுறுத்தவில்லை என தெரிவித்த தயாசிறி, எதிர்க்கட்சியில் இருந்தபோது விருப்பத்திற்கேற்றவாறு கேள்விகளை எழுப்பிய ஹந்துன்நெத்தி போன்றவர்கள், எதிர்க்கட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை மறக்க முடியாது என கூறினார்.

மூல கேள்வியை அடிப்படையாகக் கொண்டு துணை கேள்விகளை நேரடியாக கேட்குமாறு சபாநாயகர் தயாசிறிக்கு அறிவுறுத்தியதை இந்த பிரச்சினை எழுந்தது.

Share This