பாட்டலி வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

பாட்டலி வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு
ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பேருக்கு எதிரான வழக்கை நவம்பர் 18 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் நடந்த ஒரு வாகன விபத்தில் ஒரு இளைஞனுக்கு பலத்த காயம் ஏற்படுத்தியது மற்றும் விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சந்தேக நபர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாவார். மற்றொரு சந்தேக நபர் அப்போதைய வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தற்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சகருமான சுதத் அஸ்மடல ஆவார்.

அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கை மாற்ற முடியாது என்றும் தொடர முடியாது என்றும் ரணவக்க தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுடன் வழக்கை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த வழக்கில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜராவார் என அரசு தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார். வழக்கிற்கு தினமொன்று நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கமைய விசாரணையை நவம்பர் 18 ஆம் தேதி நடத்த உத்தரவிடப்பட்டது. குறித் தினத்தில் ஆஜராகும் வகையில் வழக்கின் சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

Share This