டேன் பிரியசாத் கொலை சம்பவம் – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

டேன் பிரியசாத் கொலை சம்பவம் – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (03.05) பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மேல் மாகாண தெற்கு விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையுடன், சந்தேக நபருக்கு குற்றத்தில் உள்ள தொடர்பைக் குறிக்கும் விரிவான அறிக்கையையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதன்படி, சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை எதிர்காலத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.

 

Share This