09 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சுங்க அதிகாரி உட்பட மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 09 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சுங்க அதிகாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபர் ஒருவரும் அவரது உதவியாளர் ஒருவரும் துபாயிலிருந்து சிகரெட்டுகளை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் சிகரெட்டுகளுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்ததாகவும் பின்னர் சுங்க அதிகாரி தனது அடையாள அட்டையுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து சிகரெட்டுகளை வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் , விமான நிலைய வளாகத்தில் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 300 அட்டைப் பெட்டிகள் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.