முதலை அச்சுறுத்தல்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடலோரப் பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் எழுந்துள்ளமை தொடர்பில், இலங்கை உயிர்காக்கும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதலைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசங்க நாணயக்கார வலியுறுத்தினார்.
முதலைகளைக் கண்டதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்தான முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்தக் கடலோரப் பகுதிகளைப் பயன்படுத்துகையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.