
துடுப்பாட்ட வீரர் தரவரிசை – இரண்டாம் இடம்திற்கு விராட் கோலி முன்னேற்றம்
ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அண்மையில் முடிவடைந்த நிலையில், புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.
இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு சதங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை விராட் கோலி குவித்திருந்தார்.
இதன்படி, புதிய தரவரிசையின் படி இரண்டு இடங்கள் முன்னேறியுள்ள விராட் கோலி 773 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ரோகித் சர்மா 781 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் ஒரு இடம் பின் தள்ளப்பட்டுள்ளதுடன், 766 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் முதலிடத்திலும் இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் இரண்டாவது நீடித்துள்ளனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை வீரர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதலிடத்தில் நீடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
