ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ​​ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் zoom தொழினுட்பத்தினூடாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்னிலையானார்.

சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜா பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்னிலையானது.

CATEGORIES
TAGS
Share This