வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இன்று மாலை 04.00 மணியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வாக்கெடுப்பு இடம்பெற்ற மத்திய நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை முதலாவது தேர்தல் பெறுபேற்றினை வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.