சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் ஜனவரியில் வழங்கப்படும்
வெள்ளம்,வறட்சி மற்றும் காட்டு யானைகளினால் சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் நெல் உட்பட பயிர்ச்செய்கைகளுக்கு வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 80 சதவீத விவசாயிகளுக்கு சுமார் 80 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் இழப்பீடுகள் ஜனவரி 5 ஆம் திகதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெரும்போகத்திற்கான இழப்பீடு 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.