நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

பணமோசடி, பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தை சர்வதேச தரத்திற்கமைவாக திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, சட்டமா அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி உயர் நீதிமன்ற எண். SC/SD/92/2024 இன் சிறப்புத் தீர்ப்பின் அடிப்படையில் வரைவாளர் தயாரித்த சட்டமூலம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட இறுதி சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

வர்த்தகம், வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

 

Share This