பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு குழு நியமனம்

பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு குழு நியமனம்

நிலவும் மழையுடனான வானிலையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பயிர்ச்சேதம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக மாவட்ட பணிப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங் ஆராச்சி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This