களியாட்ட விடுதி மோதல் சம்பவம் – கைதானவர்களுக்கு விளக்கமறியல்

களியாட்ட விடுதி மோதல் சம்பவம் – கைதானவர்களுக்கு விளக்கமறியல்

கொழும்பு கொம்பனி தெரு பகுதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நால்வரும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது வழக்கை விசாரித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

யோஷித ராஜபக்ஷவுடன் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வருகை தந்த நால்வரே இவ்வாறு மோதலில் ஈடுபட்டனர்.

Share This