க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

பேருந்துகளில் பொலிஸார் மூலம் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் வாரத்தில் பதில் பொலிஸ்மா அதிபருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் இடம்பெறும் வரையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் தனது தொழிலை நடத்துவதில் தாம் சிக்கலகளை எதிர்கொண்டுள்ளதாகவும், பொலிஸாராலோ அல்லது எவராலும் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்திற்கு மேலாக செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This