நில்வலா கங்கையில் “Clean Sri Lanka ” வேலைத்திட்டம்

நில்வலா கங்கையில் “Clean Sri Lanka ” வேலைத்திட்டம்

“Clean Sri Lanka ” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணங்க, நில்வலா கங்கையில் உள்ள தடைகளை அகற்றுதல் மற்றும் சுத்தம் செய்தல் பணிகள் மீண்டும் ஆரம்பமாகின.

அதுரலிய மகா வித்தியாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி மீண்டும் நேற்று பணிகள் தொடங்கின.

சீரற்ற வானிலை காரணமாகஇந்த செயற்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் மூன்றாவது கெமுனு கண்காணிப்பகத்தின் வீரர்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் மேலும் முன்னெடுக்கப்படுகின்றன.

 

 

CATEGORIES
TAGS
Share This