குடியுரிமையை ட்ரம்ப் ரத்து செய்ய முடியாது – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க சட்டம், 14 ஆவது திருத்தத்தின்படி, குடியுரிமைப் பிரிவின் கீழ், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் குடியுரிமைக்கு உரிமையுடையவர்கள் என்ற வாதத்தை ஏற்று, அந்த உரிமையை வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு, பிறப்பால் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் கீழ் பல நீதிமன்றங்கள் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்தன.
இந்நிலையில் இதுதொடர்பான மேன்முறையீட்டு வழக்கு பாஸ்டனில் உள்ள ஃபெடரல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கியிருப்போருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு
பிறப்பால் குடியுரிமை வழங்குவதை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.