பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை முதலீடு செய்த சீனா – பின்னணி என்ன?

பிரித்தானிய வணிகங்கள் மற்றும் திட்டங்களில் இந்த நூற்றாண்டில் சீனா பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை முதலீடு செய்துள்ளது.
BBC Panorama தகவல்படி, இந்த முதலீடுகள் சில நேரங்களில் சீனாவுக்கு இராணுவத் தர தொழில்நுட்பத்தை அணுக அனுமதித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் இருந்த முதலீடுகளின் மதிப்பை, 2023 ஆம் ஆண்டின் பண மதிப்பிற்கு மாற்றி கணக்கிட்டால், சீனாவின் மொத்த முதலீடு £45 பவுண்ட் பில்லியன் ஆகிறது.
இந்த முதலீடுகள் 2015 ஆம் ஆண்டில் சீனா வெளியிட்ட “Made in China 2025” திட்டத்திற்குப் பிறகே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவமொன்றின் தகவலுக்கமைய சீன முதலீடு அதிகமாக காணப்பட்ட G7 நாடுகளில் பிரித்தானியா முதல் இடத்தில் உள்ளது.
சீன முதலீடுகளில் சில வணிக ரீதியானது என்றும் சில முதலீடுகள் சீன அரசின் நீண்டகால மூலோபாய நோக்கங்களுடன் ஒத்துப்போகும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Made in China 2025” திட்டம் விண்வெளி, மின்சார வாகனங்கள், ரோபாட்டிக்ஸ் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் சீனாவை உலகத் தலைவராக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
இந்த முதலீடுகள் மூலம் சில பிரித்தானிய நிறுவனங்களின் தொழில்நுட்பம் சீனாவுக்கு மாற்றப்பட்டது என BBC கண்டறிந்துள்ளது.
