சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த “Child First“ திட்டம்

குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகப் பொறுப்பு மற்றும் காலத்தின் தேவை என்பதைக் கருத்திற்கொண்டு, இலங்கை பொலிஸ் சிறுவர் பாதுகாப்பை நோக்கிச் செயற்பட“Child First” என்ற புதிய திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.
ஆரம்ப நிகழ்வு நேற்று காலை மொறட்டுவை பௌத்த மத மண்டபத்தில், கல்கிசை பொலிஸ் பிரிவை மையமாகக் கொண்டு, சமூக பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிம்ஷானி ஜசிங்கராச்சியின் தலைமையில் இடம்பெற்றது.
குழந்தைப் பாதுகாப்பு என்பது பாதுகாவலர்களின் பொறுப்பு” என்ற கருப்பொருளில், சமூகப் பொலிஸ்பிரிவின் மூலம், குழந்தைகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை பொலிஸ் தொடர்ச்சியான திட்டங்களைத் முன்னெடுத்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் புறக்கணிப்படுதல் மற்றும் பின்தொடர்தல் இல்லாமை காரணமாக குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளான சம்பவங்கள் பல கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதை கருத்திற்கொண்டும் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.