இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 02 போட்டிகள் இன்று

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 02 போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.
இன்றைய தினம் முதலாவதாக இடம்பெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி ஹைதராபாத், ரஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில்பிற்பகல் 3.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை சென்னை எம் ஏ சிதம்பரம் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.