
செம்மணி மனிதப் புதைகுழி சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் நிறைவு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதி கோரி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதனிடையே, இன்றைய போராட்டத்தின் போது அறிக்கை ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
CATEGORIES இலங்கை
