கெஹெலிய மற்றும் குடும்பத்தினருக்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் முன் குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டன.
இதனையடுத்து, கெஹலிய ரம்புக்வெல்ல, ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுனி கிருஷ்ணாஜினா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, இரண்டு வழக்குகளையும் ஜனவரி 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் விசாரணைக்கு முந்தைய கலந்தாய்வுக்கு அழைக்கவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோருக்கு எதிரான மற்றொரு வழக்குக்கான குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் அவர்களை பிணையில் விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டது.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில் சொத்துக்களை முறைகேடாக ஈட்டிய சம்பவங்கள் தொடர்பாக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
