லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவியேற்பின் இரண்டாம் ஆண்டு விழாவிற்காக இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் மூலம் அரசாங்கத்திற்கு 1.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.