யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெரும் அமளி துமளி – சிறிதரன் எம்.பி வெளிநடப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியால் அரசாங்க அமைச்சர் இராமலிங்கம் சந்திராசேகரன் தடுமாறி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ் மவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம் (25.03.2025) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுவருகிறது
உள்ளுராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயலாளரும் மாவட்ட அரச அதிபருமான பிரதீபன், வடக்கின் ஆளுநர் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், ரஜீவன், அர்ச்சுனா, பவானந்தராஜா, இளங்குமரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.