தனது பெயரைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதை தடுக்குமாறு சந்திரிகா கோரிக்கை

தனது பெயரைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதை தடுக்குமாறு சந்திரிகா கோரிக்கை

தனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் நாயகத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில் ‘கதிரை சின்னத்தின்’ கீழ் போட்டியிடும் ஐக்கிய மக்கள் முன்னணியின் சில வேட்பாளர்கள், தனது புகைப்படம் மற்றும் சுவரொட்டிகளுடன் கூடிய துண்டுப்பிரசுரத்தை அந்தப் பகுதி முழுவதும் ஒட்டியுள்ளதாக சந்திரிகா குமாரதுங்க அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்கவோ அல்லது சுவரொட்டிகளை அச்சிடவோ எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என
கூறிய அவர் அத்தனகல்ல மற்றும் பிற பகுதிகளில் கதிரை சின்னத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்கள் விளம்பர நோக்கங்களுக்காக தனது பெயர் அல்லது புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, இந்த நடவடிக்கையை நிறுத்தி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் முன்னணியின் தொடர்புடைய தலைவர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This