
சாமர சம்பத்தின் பிணையை ரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு
சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்துச் செய்யுமாறு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (16) நிராகரித்துள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள், சந்தேகநபரின் பிணையை ரத்து செய்வதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிசித்துள்ளார்.
CATEGORIES இலங்கை
