Category: இலங்கை

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – பலர் உயிரிழப்பு, இரு இலங்கைப் பெண்கள் படுகாயம்

Mano Shangar- June 15, 2025

இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஹைஃபா ... Read More

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

admin- June 14, 2025

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக ஒவ்வொரு வான்கதவும் இரண்டு அடி அகலத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பொல்கொல்ல அணையிலிருந்து விக்டோரியா நீர்த்தேக்கம் வரையிலான மகாவலி ஆற்றின் ... Read More

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

admin- June 14, 2025

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் 07 மாவட்டங்களில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ... Read More

மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

admin- June 14, 2025

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 02.30  முதல் நாளை பிற்பகல் 02.30 வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல்

admin- June 14, 2025

துருக்கிய கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளது. சுமார் 99.56 மீற்றர் நீளம் கொண்ட ... Read More

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

admin- June 14, 2025

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் ... Read More

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி

admin- June 14, 2025

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று பிற்பகல் ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார். அங்கு வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், ஜேர்மனியில் வசிக்கும் பல இலங்கை ... Read More

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- June 14, 2025

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் சங்கத்தின் அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன், தாதியர் ... Read More

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்

Nishanthan Subramaniyam- June 14, 2025

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார ... Read More

கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை மீண்டும் தினசரி இயங்கும் என அறிவிப்பு

admin- June 14, 2025

கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை இந்த மாதத்திற்குள் மீண்டும் தினசரி இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவை தற்போது வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்படும் நிலையில் ... Read More

தனித்தீவுக்கு மாறுகிறது பூஸா சிறைச்சாலை

Nishanthan Subramaniyam- June 14, 2025

பூஸா சிறைச்சாலையை தீவு பகுதியொன்றுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இடம் குறித்த அறிவிப்பை தற்போது வெளிப்படுத்த முடியாது – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ... Read More

வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை – இருவர் கைது

admin- June 14, 2025

வாடகைகக்கு வாகனங்களைப் பெற்று,  போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர்கள் இருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வேன் ஒன்றை வாடகைக்குப் பெற்று அதனை 1.04 மில்லியன் ... Read More