Category: இலங்கை
ஜனாதிபதியின் ஜெர்மனி விஜயம் குறித்து அவதூறு! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
அண்மையில் ஜெர்மனிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறித்து தவறான மற்றும் வெறுப்பூட்டும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் ... Read More
தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் – சுமந்திரன்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ... Read More
உணவு வீணாவதைக் குறைப்பது அவசரத் தேவை – பிரதமர் வலியுறுத்தல்
உணவு வீணாவதைக் குறைப்பதும், உணவுப் பாதுகாப்பின்மையைக் குறைப்பதும் அவசரத் தேவையென பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். கொழும்பில் உள்ள ITC ரத்னதீபா ஹோட்டலில் இன்று நடைபெற்ற “கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, ... Read More
தலவாக்கலை லிந்துலை நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம் – இ.தொ.கா ஆதரவு
தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்று மாலை 3.30 மணியளவில் தலவாக்கலை லிந்துலை நகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ... Read More
குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்கஸ்வோல் தோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட பகுதியில் பணிபுரிந்துக்கொண்டிருந்த போது அவர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்த நான்கு பெண் ... Read More
கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விசாரணையின் ... Read More
கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில்
"முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது." இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ... Read More
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 5.30 வரை நடைபெறவிருந்த நிலையில், நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் - இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை ... Read More
மீனவர்களுக்கான புதிய காப்பீட்டுக் கொள்கை – அடுத்த மாதம் அறிமுகம்
மீனவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் கருத்திற்கொண்டு, புதிய காப்பீட்டுக் கொள்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி கூறியுள்ளார். இந்த காப்பீடு ஜூலை முதலாம் திகதி டிக்வெல்ல ... Read More
இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணம் வைப்புச் செய்த ஒருவர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 50,000 ரூபாவை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட ... Read More
2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) முற்பகல் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் ... Read More
வலி வடக்கு பிரதேச சபையை தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பு
வலி வடக்கு பிரதேச சபைக்கான கன்னி சபை அமர்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வலி வடக்கு பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 35 ஆசனங்களைக் கொண்ட வலி ... Read More












