Category: சிறப்பு செய்திகள்

கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பலின் உதவியை நாடும் இலங்கை

Mano Shangar- November 28, 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பேரிடரில் சிக்கியுள்ள மீட்கும் நடவடிக்கைகளுக்காக தற்போது கொழும்பில் தரித்து நிற்கும் இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா ... Read More

விமான நிலையம் செலலும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

Mano Shangar- November 28, 2025

மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், 1979 அல்லது +94 117 ... Read More

மோசமாகும் வானிலை – இராணுவத்தினருக்கு ஜனாதிபதி அவசர உத்தரவு

Mano Shangar- November 28, 2025

நாடு முழுவதும் நிலவும் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே 20,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும், இராணுவம் ... Read More

ரயில் சேவைகள் நிறுத்தம்

Mano Shangar- November 28, 2025

நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று (28) காலை 6:00 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களத்தின் கூடுதல் பொது மேலாளர் (செயல்பாடுகள்) ... Read More

சீரற்ற வானிலை – 56 பேர் உயிரிழப்பு

Mano Shangar- November 28, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ... Read More

யாழ். நல்லூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர்நாள் நினைவேந்தல்

Nishanthan Subramaniyam- November 27, 2025

மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27.11.2025) நல்லூரடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று (27.11.2025) மாலை 06.05 க்கு மணி ஒலிக்க, 06.06 க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ... Read More

கொட்டும் மழைக்கு மத்தியில் வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

Nishanthan Subramaniyam- November 27, 2025

மாவீரர்களின் நினைவு நாளான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பிரஜைகள் குழு ஒன்றிணைந்து மாவீரர் நாளை அனுஸ்டித்தனர். வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பிரஜைகள் குழுவின் ... Read More

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்

Nishanthan Subramaniyam- November 27, 2025

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'தித்வா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. யேமன் நாடால் பரிந்துரைக்கப்பட்ட ... Read More

யாழ். பல்கலைகழகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

Nishanthan Subramaniyam- November 27, 2025

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்படி, தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் ... Read More

மட்டக்களப்பு மாவீரர் துயிலுமில்லங்களில் பேரெழுச்சியாக திரண்ட மக்கள்

Nishanthan Subramaniyam- November 27, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டியடி துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு இன்று (27.11.2025) சிறப்புற இடம்பெற்றுள்ளது. இதன்போது, மக்கள் பேரெழுச்சியாக திரண்டு வந்து கண்ணீருடன் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவேந்தலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ... Read More

பேரிடர் நிலை – வரவு செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைப்பு

Mano Shangar- November 27, 2025

பேரிடர் நிலைமை காரணமாக, வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தை நாளை மற்றும் சனிக்கிழமைகளில் நிறுத்தி வைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார்.  சில ... Read More

இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இல்லை: அடுத்தவாரம் நள்ளிரவு வரை கூடும்

Nishanthan Subramaniyam- November 27, 2025

நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அடுத்த வாரம் திங்கட்கிழமை (1) மற்றும் செவ்வாய்க்கிழமை (2) ஆகிய தினங்களில் நள்ளிரவு 12 மணி ... Read More