Category: இலங்கை
நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: ரூ. 500 பில்லியனுக்குரிய குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு
2025.12.18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள பாராளுமன்றம் 2025.12.19ஆம் திகதியும் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் ... Read More
பேரிடரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா. உதவ வேண்டும்: சஜித் கோரிக்கை
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ... Read More
அனுராதபுரம் மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டம்
வைத்தியசாலை வளாகத்தில் வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து, தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த ... Read More
பாராளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடுகிறது
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, நாளையும் (18) மற்றும் நாளை மறுதினமும் (19) பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இன்று (17) ... Read More
போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர ... Read More
டித்வா சூறாவளியால் 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடரால் நாடு முழுவதும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 13,000 ஐ தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் (DMC) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 13,781 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், ... Read More
பொருளாதார மற்றும் சமூக மீட்பு முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக சீனா உறுதி
டிட்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக மீட்பு முயற்சிகளுக்கு சீனா தனது பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் துணைத் தலைவர் வாங் டோங்மிங், ... Read More
காணாமற்போன மஞ்சள் அனகொண்டா கண்டுப்பிடிக்கப்பட்டது
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமற்போனதாகக் கூறப்பட்ட 'மஞ்சள் அனகொண்டா' பாம்பு, பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி ஒன்று காணாமல் ... Read More
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி வழங்கிய உயரிய பரிசு
ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை சந்தித்தார். அவர் ஜாம்நகரில் வந்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார். ... Read More
கெஹெல்பத்தர வழங்கிய வாக்குமூலம் – சிக்கிய பயங்கர ஆயுதங்கள்
களனி, எண்டெரமுல்ல பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மற்றும் பெருமளவான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதாள உலகக் குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ... Read More
சமாதான பேச்சுகள் எப்படி இருந்தன – புத்தகமொன்றின் ஊடாக விளக்கமளிக்க தயாராகும் ஜீ.எல்.பீரிஸ்
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகள் குறித்த புத்தகமொன்றை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட உள்ளார். ‘The Sri Lanka Peace Process: An Inside View’ ... Read More
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில் ... Read More
