நந்துன் சிந்தக விக்ரமரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நந்துன் சிந்தக விக்ரமரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான நந்துன் சிந்தக விக்ரமரத்னவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதன்படி, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி, முல்லேரியா பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, வீட்டின் உரிமையாளருக்கு துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டல், அங்கிருந்த மோட்டார் வாகனத்தை கடத்திச் சென்று, 20,000 ரூபா பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, நந்துன் சிந்தக விக்ரமரத்னவுக்கு எதிராக  சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This