பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா தோட்டம்

மொனராகலை, தனமல்வில தலைமையக பொலிஸ்நிலைய அதிகாரிகள் குழுவொன்று ஊருஹெர பகுதியில் உள்ள கஞ்சா தோட்டமொன்றை சுற்றி வளைத்துள்ளனர்.
அந்த கஞ்சா தோட்டத்தில் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு பயிரிடப்பட்ட சுமார் இருபத்தைந்தாயிரம் கஞ்சா மரங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்வத்துடன் தொடர்புடைய ஹொரணை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கஞ்சா செடிகளும் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.