கேபிள் கார் விபத்து – மற்றுமொரு பிக்கு இன்று உயிரிழப்பு

கேபிள் கார் விபத்து – மற்றுமொரு பிக்கு இன்று உயிரிழப்பு

குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இதற்மைய இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.

நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகளும் அடங்குகின்றனர்.

உயிரிழந்த உள்நாட்டு பிக்குகளின் இறுதி கிரியையகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இதேவேளை, 05 பிக்குகள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This